2023 Kurupairchi is a vision
நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக குருவும் விளங்குகிறது. சுபக்கிரகமாக கருதப்படும் குருபகவான் தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார். பொன்னிற மேனியான அவர் மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெள்ளை யானை வாகனத்தில் விண்ணில் வலம் வருகிறார். குருபகவான் தனது பயணத்தில் ஒரு ராசி மண்டலத்தை கடக்க சுமார் ஓராண்டு ஆகும். அதன்படி 12 ராசிகளையும் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பும் குரு பெயர்ச்சியும் ஒரே மாதத்தில் வருகிறது.
குருபகவான் பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். அப்படியே அவர் கெடுபலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அந்த கெடுபலன் நமக்கு ஒரு படிப்பினையை உணர்த்துவதாகவே இருக்கும். அதாவது ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றதாகவே அமையும்.
குருபகாவன் வாக்கிய பஞ்சாங்கபடி ஏப்ரல் 22-ந் தேதி அன்று (சனிக்கிழமை) இரவு11-34 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். மேஷ ராசியில் இருக்கும் குருபகவான் 11-9-2023 அன்று வக்கிரம் அடைந்து 4-12-2023 வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார். மேஷராசியில் இருக்கும் குருபகாவன் 2024 மே 5-ந் தேதி அன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த குருபெயர்ச்சி மிதுனம், சிம்மம்,துலாம்,தனுசு, மீனம் ஆகிய ராசியினருக்கு மிகவும் சிறப்பான பலன்கûüயும். மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினருக்கு பார்வைகüôல் நற்பலன்கûü தருவார்.
இந்த குரு பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலனை பார்க்கக்கூடாது. அதன்படி முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது மகர ராசியில் இருக்கும் சனிபகவான் 20-12-2023 அன்று பெயர்ச்சி அடைந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார். அவர்கள் அங்கு 8-10-2023 அன்று பெயர்ச்சி அடைந்து ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் இடம் பெயருகிறார்கள்.
மேலும் வாசகர்கள் இன்னொரு அம்சத்தை கவனிக்க வேண்டும். இங்கே தொகுத்து தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தால்கூட அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இயன்ற பரிகாரத்தை செய்தால்போதும். பணத்தைக் கொட்டித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது இல்லை. பரிகாரம் செய்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை அதிகரிக்கும். மனதில் நிரந்தர மகிழ்ச்சி நிலவும்.
– பண்டித காழியூர் நாராயணன்.
ReplyForward |