பிரளய கல்பாதி என்றால் என்ன?

இன்றைய & நாளைய சிறப்புகள்

What is Piralaya Kalbathi

1/12/2022

கார்த்திகை மாதம் அமாவாசைக்குப்பிறகு வரும் நவமி திதி நாளை பிரளய கல்பாதி என்று அழைப்பர். தற்போது கலியுகம்தனே நடக்கிறது. இந்த கலியுகம் முடியும்போது உலகில் பிரளயம் ஏற்படும். அது இந்த பிரளய கல்பாதி தினத்தில்தான் நிகழும். இந்த நாளில் பொதுவாக அதிஜல ராசி அல்லது சமுத்திர ராசி என்று அழைக்கப்படும் மீன ராசியில் சந்திரன் இருப்பார். இந்த ஆண்டும் மீன ராசியில்தான் சந்திரன் இருக்கிறார். இந்த நாளில் மழை பெய்ய ஆரம்பித்தால் அந்த மழை தொடர்ந்து பல நாட்கள் பெய்யும். அதுவும் கல் மழை(பனிக்கட்டி மழை) பெய்யும். அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இந்த ஆண்டு இன்று (1&ந் தேதி) வியாழக்கிழமை பிரளய கல்பாதி உள்ளது.