சனி தோஷ பரிகாரம் செய்ய சிறந்த நாள்

இன்றைய & நாளைய சிறப்புகள்

Saturn is the best day to make amends

30.8.2021

நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த நாளில் அவருக்கு அர்ச்சனை செய்து தோஷ பரிகாரம் செய்வது நல்லது. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை நவமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில்தான் சனிபகவான் பிறந்தார். இந்த ஆண்டு நவமி திதி ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் பகல் முழுகூதும் நவமி திதி உள்ளது. ரோகிணி நட்சத்திரமும் அன்று உள்ளது ஆனால் காலை10.25 மணி வரைதான் ரோகிணி நடத்திரம் உள்ளது. எனவே 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.25 மணிக்குள் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். இதனால் சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் சனிபகவானுக்கு நீல வஸ்திரம் சாத்தி குவழை மலர்க¬ளால் அர்ச்சனை செய்து எள் சாதம் படைத்து வழிபடவேண்டும். மேலும் அப்போது எட்டு எள் விளக்குகள் ஏற்றுவதும் சிறப்பு.
மேலும் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு மனதால் சனிபகவானை நினைத்துக் கொண்டு அதன்பின் சாப்பிடுங்கள். ஊனமுற்றவர்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள்.