The prophecy of sending the dead to heaven
மகாளய பட்ச காலத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையட்டி வரும் பரணி நட்சத்திர நாள் எமதர்மராஜனுக்கு உகந்த நாள். பரணி எமதர்மராஜன் பிறந்த நட்சத்திரம். மகாளபட்சத்தில் வரும் இந்த நாளில் எமதர்ம ராஜன் மானிடர்கள் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப அவர்களை நரகம், சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நாம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் எமதர்மராஜனின் மனம் குளிர்ந்து நமது முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்.இந்த நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 10.05 மணிக்கு பிறகு செய்யலாம். அல்லது மறுநாள் 25-ந் தேதி காலை 10.36 மணிக்குள் செய்யலாம்.